வயநாடு கனமழை : தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் - சீமான்!

Naam tamilar kachchi Seeman Kerala
By Vidhya Senthil Jul 30, 2024 11:23 AM GMT
Report

வயநாடு கனமழை மற்றும் நிலச்சரிவு நிகழ்வை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

 வயநாடு

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி, மேப்பாடி முன்டக்கை, சூரல்மலா போன்ற பகுதிகளில் இன்று (30-07-2024) அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

kerala

மேலும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலத்த காயம் ஏற்பட்டு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாகவும் செய்திகள் வருகிறது.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்..வயநாடு விபத்து!! த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல்

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்..வயநாடு விபத்து!! த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல்

குருதிக்கொடை பாசறை 

சிக்கி உள்ளவர்களை கேரளா மாநில அரசும், இந்திய ஒன்றிய அரசும் விரைந்து மீட்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உரிய உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

வயநாடு கனமழை : தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் - சீமான்! | Kerala Landslide Declared National Calamity Seeman

இந்த நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கேரளா மாநில அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு குருதி தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.