மகளை அந்த நிலையில் பார்த்து கதறிய பெற்றோர் - குழந்தையுடன் எஸ்கேப் ஆன கணவர்!
மகளின் உடலை அழுகிய நிலையில் பார்த்த பெற்றோர் புகாரளித்துள்ளனர்.
அழுகிய உடல்
கேரளா, காஞ்சியார் பகுதியைச் சேர்ந்தவர் பிஜேஸ்(32). விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி அனுமோல் (27). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மனைவியை காணவில்லை என கணவர் போலீஸில் புகாரளித்துள்ளார்.
தொடர்ந்து பெண்ணின் பெற்றோரும் தேடி உள்ளனர். அப்போது அவர்களது வீட்டிற்கு வந்து பார்த்தபோது படுக்கை அறையில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. கட்டிலுக்கு அடியில் போர்வை சுற்றப்பட்ட நிலையில் அனுமோல் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.
கணவன் மாயம்
இதனால், அதிர்ச்சியடைந்தவர்கள், போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடம் விரைந்த போலீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், இறந்த பெண்ணின் கணவர் குழந்தையுடன் தலைமறைவாகியுள்ளார். அதன் அடிப்படையில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கொலை செய்த தனது மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி கடத்துவதற்காக அவர் மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எங்களுக்கு எழுந்திருக்கிறது என போலீசார் தெரிவித்தனர்.