பெண்களின் உடல் உறுப்புகள் விற்பனை - நாட்டை உலுக்கிய நரபலியின் திடுக் தகவல்!
கேரள நரபலியில் இறந்த பெண்கள் உடல் விற்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
நரபலி
கேரளாவில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்த வழக்கில் போலி மந்திரவாதியான ஷாபி மற்றும் மருத்துவர் பகவல் சிங் அவரது மனைவி லைலாவையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளமையாக இருக்கவும், பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் இந்த நரபலி நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நரபலி கொடுத்து வந்த பகவல்சிங் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், பிரிட்ஜில் இருந்து 10 கிலோ மனித இறைச்சி மற்றும் எலும்புத் துண்டுகளை கண்டறிந்தனர்.
உடல் உறுப்புகள் விற்பனை?
இதனால் உடல் உறுப்புகளை விற்பதற்காக அவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இதுகுறித்து கொச்சி காவல் ஆணையர் சி.எச்.நாகராஜு கூறும்போது, “நரபலி வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஷபி, பல்வேறு கதைகளை கூறியுள்ளார்.
இவற்றின் உண்மைத் தன்மை குறித்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு தடயங்களை சேகரித்துள்ளனர். அதேநேரம், உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் நோக்கத்தில் இந்த சம்பவம் நடை பெற்றிருக்கலாம் என சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது.
இதில் உண்மை இல்லை. கொலை செய்யப்பட்டதை நிரூபிப்பதும் கொலைக்கான காரணத்தைக் கண்டறிவதுமே எங்கள் முதன்மை நோக்கமாக உள்ளது” என்று தெரிவித்தார்.