ஜெயலலிதா வழங்கிய யானையை அடித்து துன்புறுத்திய பாகர்கள் - உயர்நீதிமன்றம் கண்டனம்!

Kerala India Elephant
By Jiyath Feb 10, 2024 10:30 AM GMT
Report

யானைகளை அடித்து துன்புறுத்திய குற்றத்திற்காக 2 பாகன்களை தேவசம் போர்டு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

துன்புறுத்தல் 

கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

ஜெயலலிதா வழங்கிய யானையை அடித்து துன்புறுத்திய பாகர்கள் - உயர்நீதிமன்றம் கண்டனம்! | Kerala Hc Condemn To Hitting Elephants Guruvayur

இந்த கோவிலுக்கு சொந்தமான யானைகள் பராமரிப்பு மையம் மம்மியூர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட யானைகள் பரமாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் யானைகளை பராமரிக்கும் 2 பாகங்கள் யானையை அடித்து துன்புறுத்தும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் , துன்புறுத்தலுக்கு ஆளான 2 யானைகள் கிருஷ்ணா மற்றும் சிவன் என்பது தெரியவந்தது.

அரசு மருத்துவமனை ஆப்ரேஷன் தியேட்டரில் திருமண போட்டோஷூட் - எல்லை மீறிய மருத்துவர்!

அரசு மருத்துவமனை ஆப்ரேஷன் தியேட்டரில் திருமண போட்டோஷூட் - எல்லை மீறிய மருத்துவர்!

நீதிமன்றம் கண்டனம் 

இதில் கிருஷ்ணா என்ற யானை மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குருவாயூர் கோவிலுக்கு வழங்கிய யானை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து யானைகளை அடித்து துன்புறுத்திய குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட 2 பாகன்களையும் தேவசம் போர்டு பணியிடை நீக்கம் செய்தது.

ஜெயலலிதா வழங்கிய யானையை அடித்து துன்புறுத்திய பாகர்கள் - உயர்நீதிமன்றம் கண்டனம்! | Kerala Hc Condemn To Hitting Elephants Guruvayur

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கனது நீதிபதி அனில் கே.நரேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, யானைகளை பாகன்கள் தாக்கிய சம்பவத்திற்கு தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

இந்த சம்பவம் பற்றி குருவாயூர் தேவசம் போர்டு அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கேரள வனத்துறை தலைமை அதிகாரி அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.