குடியுரிமை திருத்தச் சட்ட அமலுக்கு தடை விதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தை நாடிய அரசு!
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது
குடியுரிமை திருத்தச் சட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்த நிலையில், 4 ஆண்டுகள் கடந்து தற்போது நாடு முழுவதும் சிஏஏ அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சட்டம், 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் ஆகியோர் குடியுரிமை பெற வழிவகை செய்கிறது.
கேரள அரசு
இதனிடையே குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம். சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.