உள்ளாடைகளை கழற்றச் சொன்ன சர்ச்சை - மறு தேர்வு தேதி அறிவிப்பு

Kerala NEET
By Sumathi Aug 27, 2022 09:56 AM GMT
Report

நீட் தேர்வின்போது மாணவிகளின் உள்ளாடைகளைக் கழற்றச்சொன்ன மையத்துக்கு மறு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு சர்ச்சை

கேரளா, கொல்லம் பகுதியில் உள்ள ஒரு மையத்தில் நடந்த நீட் தேர்வில், தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்க்கச் சொல்லிவிட்டு, தேர்வு அறைக்குள் அனுமதித்தனர்.

உள்ளாடைகளை கழற்றச் சொன்ன சர்ச்சை - மறு தேர்வு தேதி அறிவிப்பு | Kerala Girls Get Another Chance To Write Neet Exam

இதனால் மனதளவில் பாதிப்படைந்த மாணவிகள் அழுதுகொண்டே நீட் தேர்வு எழுதினர். இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேசிய தேர்வு முகமை

இதற்கிடையில் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை தலைவருக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், இந்த சம்பவம் முற்றிலும் கண்டணத்திற்குரியது.

உள்ளாடைகளை கழற்றச் சொன்ன சர்ச்சை - மறு தேர்வு தேதி அறிவிப்பு | Kerala Girls Get Another Chance To Write Neet Exam

மாணவிகளின் மனநிலையினை முற்றிலும் சீர்குலைக்கக் கூடிய வகையில் தேர்வு முகமை அலுவலர்கள் நடந்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மறு தேர்வு 

மேலும் கேரளாவின் டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மூன்று நாட்களுக்கு மீது முறையான வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்களை தண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய என்டிஏ, மீண்டும் அந்த மையத்துக்கு மட்டும் மறு தேர்வு நடத்த முடிவு செய்தது. இந்தத் தேர்வு, செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று நடைபெறும் என்று என்டிஏ அறிவித்துள்ளது.

கொல்லத்தில் உள்ள எஸ்.என். பள்ளியில் செப்.4 மதியம் 2 மணி முதல் 5.20 மணி முதல் தேர்வு நடைபெற உள்ளது. விருப்பப்படும் மாணவிகள் மட்டும் தேர்வை எழுதலாம். மறு தேர்வை எழுத விரும்பாத மாணவர்களுக்கு, அவர்கள் ஏற்கெனவே எழுதிய நீட் தேர்வின் முடிவுகளே வெளியிடப்படும்.