வீடியோ காட்டிய காதலன் - 64 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி
பள்ளி மாணவி 64 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிப்பது குறித்து குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கற்றுக் கொடுத்துள்ளனர்.
12 ஆம் வகுப்பு மாணவி
அப்போது 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர், 13 வயதில் முதல் தான் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தெரிவித்துள்ளார். அந்த மாணவி 2019 ஆம் ஆண்டு ஒரு நபரை காதலித்துள்ளார்.
அந்த காதலன் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அப்பொழுது மாணவிக்கு தெரியாமல் அதை வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு காட்டியுள்ளான்.
அதன் பிறகு அந்த வீடியோவை வைத்து நண்பர்கள், பள்ளி ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் உறவினர்கள், தந்தையின் நண்பர்கள் என 64 பேர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
64 பேர்
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் 34 பேரின் பெயர்களை மாணவி எழுதிக்கொடுத்துள்ளார். மேலும் 30 பேரின் மொபைல் எண்களை மாணவி தெரிவித்துள்ளார். மாணவியிடம் செல்போன் இல்லாத நிலையில், மாணவி தந்தையின் செல்போன் எண்ணுக்கு அழைத்து பேசியுள்ளனர்.
இது தொடர்பாக 64 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்ணின் காதலன் உட்பட பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள் என 13 பேர் தற்போது வரை கைது செய்துள்ளனர். தலைமைறைவாகியுள்ளவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தற்போது சிறுமிக்கு பெண்கள் காப்பகத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.