இனி பெண்ணை பின் தொடர்ந்தாலே 5 ஆண்டு சிறை - தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதா
பெண்களுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை அதிகரித்து தமிழக அரசு சட்டத்திருத்தம் மேற்கொண்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றம்
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
சட்ட திருத்தம்
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை அதிகரித்து தமிழக சட்டமன்றத்தில் 2025 குற்றவியல் திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த புதிய மசோதாவின் படி, பெண்களைப் பின்தொடர்ந்தால் ஜாமீனில் வெளிவர முடியாதபடி 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
நெருங்கிய உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், கூட்டு பாலியல் வன்கொடுமை, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தல் போன்றவற்றிக்கு ஆயுள் தண்டனை.
மரண தண்டனை
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை. மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை.
ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை முதல் ஆயுள் தண்டனை. குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 ஆண்டு முதல் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.