ஏழை பெண்ணுக்காக சாலையில் பாட்டுபாடிய சிறுமி - ரியல் கேரளா ஸ்டோரிக்கு குவியும் பாராட்டு!

Viral Video Kerala
By Sumathi Jun 06, 2023 09:49 AM GMT
Report

ஏழை பெண்ணுக்காக சாலையில் நின்றுகொண்டு மாணவி பாடிய பாடல் வைரலாகி வருகிறது.

மனித நேயம்

மலப்புரம், போதக்கல்லு பகுதியைச் சேர்ந்தவர் மாணவி ஆதிரா. 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் போதக்கல்லு பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, கண் பார்வை குறைபாடுடைய கணவன் மற்றும் குழந்தையை வைத்துக்கொண்டு,

ஏழை பெண்ணுக்காக சாலையில் பாட்டுபாடிய சிறுமி - ரியல் கேரளா ஸ்டோரிக்கு குவியும் பாராட்டு! | Kerala Girl Helps Out Street Singer Video

ஏழை பெண் ஒருவர் சாலையோரத்தில் பாடல் பாடி யாசகம் கேட்டுக் கொண்டிருந்துள்ளார். மேலும், அந்தப் பெண் பாட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனை கண்டு மனம் உடைந்த ஆதிரா,

குவியும் பாராட்டு

தந்தையின் அனுமதியோடு அந்த பெண்ணிடம் இருந்த மைக்கை வாங்கி பிரபலமான லாஹி லாஹி இல்லல்லா பாடலை பாடினார். அந்தச் சிறுமியின் குரலை கேட்டு பலரும் வியக்க,

அதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து, சிறுமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டிய அமைச்சர் வீணா ஜார்ஜ், மனித நேயத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதாக தெரிவித்துள்ளார். 

மேலும், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மண்சரிவில் சொந்த வீட்டை இழந்த ஆதிராவின் குடும்பம், தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறது. அவருக்கு உதவி செய்ய முன்வந்து வீடு கட்டிக் கொடுக்கும் பொறுப்பை கத்தோலிக்க பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.