குழந்தை கேட்டு வற்புறுத்திய காதலி - லாட்ஜில் கழுத்தறுத்துக் கொன்ற கள்ளக்காதலன்
காதலியை, கள்ளக்காதலன் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
கேரளா, உடுமாபாரா பகுதியை சார்ந்தவர் தேவிகா (34). அழகு கலை நிபுணரான உள்ளார். திருமணமாகி கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு, போவிக்கானம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், தேவிகாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக காதலன் சதீஷ் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்ததில், இருவரும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக தகாத உறவில் இருந்துளனர்.
காதலி கொலை
இதற்கிடையில், தீஷின் குழந்தையை பார்த்து பிடித்துப் போனதால், தேவிகா சதீஷிடம் அவரது மகளை தனக்கு தந்துவிடுமாறு தொடர்ந்து கேட்டுள்ளார். இதனால், அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதமும் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தான் இருவரும் தனியார் விடுதியில் சந்தித்துக் கொண்ட நிலையில், குழந்த வேண்டும் என மீண்டும் அடம்பிடிக்க தொடங்கியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த சதீஷ் கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.
அதன்பின், தனியார் விடுதிக்கு விரைந்த போலீஸார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.