கேரளாவை உலுக்கிய பெண் மருத்துவரின் படுகொலை - அமலுக்கு வந்த புதிய சட்டம்!
கேரளாவில் பெண் மருத்துவர் வந்தனா தாஸ் கொலை நடந்த பின்னர் அம்மாநில அரசு அவசர சட்டம் கொண்டுவந்துள்ளது.
கொலை
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கடந்த வாரம் கைதிக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து எர்ணாகுளத்தில் மருத்துவர் மீது நோயாளி ஒருவர் தாக்குல் நடத்தினார்.
இதனிடையே மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மேலும், 2012 ஆம் ஆண்டு மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தில் அம்மாநில அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
சட்டம்
இந்நிலையில், அம்மாநில அரசவை கூட்டம் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இதில், மருத்துவமனை பாதுகாப்பு சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி, சுகாதார ஊழியர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டால், 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகளை தாக்கினால், சேதம் அடைந்த பொருளின் மதிப்பை விட மும்மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.