4 -வது நாளாக தொடரும் மீட்பு பணி.. - இந்திய ராணுவம் குறித்து பினராயி விஜயன் நெகிழ்ச்சி!
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.
மீட்புப்பணிகள்
கேரளா மாநிலம் வயநாடில் 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா கிராமங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீடுகள் கண்ணிமைக்கும் நேரத்தில் மண்ணில் புதைந்தனர்.இந்த சம்பவத்தில் இருப்பிடங்கள் மட்டுமின்றி பெரியவர்கள் முதல் வீட்டு செல்ல பிராணிகள் மண்ணில் உயிருடன் புதைந்தனர்.
மேலும் இந்த கோர சம்பவத்தில் 298 பேர் உயிரிழந்த நிலையில் , 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தெர்மல் ஸ்கேனரை கொண்டு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து 4வது நாளாக . மீட்புப்பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆய்வு
இந்த நிலையில் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.இது தொடர்பாக கேரள முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், ஆற்றில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடரும் என்று கூறினார்.
இப்பேரிடரில் உயிரிழந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளை முறையாக அடக்கம் செய்ய 3 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் பினராயி விஜயன் கூறினார்.மேலும் நிலச்சரிவு மீட்புப் பணியில் இந்திய ராணுவம் சிறப்பாக செயல்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.