ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு - உக்ரைன் பகீர் அறிவிப்பு!
ரஷ்யா உக்ரைன் சண்டை தொடங்கி 10 மாதங்கள் ஆன நிலையில்கூட போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை இதனால் உக்ரைன் மக்கள் கடுமனையான நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
உக்ரைன் - ரஷ்ய போர்
பொருளாதார ரீதியாக உக்ரைன் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றது . ரஷ்ய பொருளாதாரமும் முடங்கி இருக்கிறது. ஒட்டுமொத்த அளவில் இந்தப் போர் ரஷ்யா மற்றும் உக்ரைனிலும், உலக அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்விரு நாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுவருகின்றனர் .சர்வதேச அளவில் பணவீக்கத்துக்கும் இது காரணமாக அமைந்தது. இந்நிலையில் 710 ரஷ்ய வீரர்கள் ஒரே நாளில் உயிரிழந்திருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
710 வீரர்கள் பலி
ஆனால், ரஷ்யத் துருப்புக்கள் சோலேடார் (Soledar) நகரத்தைக் கைப்பற்றியதாக ரஷ்யா கூறுகிறது. உப்புச் சுரங்கங்களுக்குப் புகழ்பெற்ற கிழக்கு உக்ரேனிய நகரத்தை குறிவைத்து நடைபெற்ற மோதலில் கடுமையான சண்டை நடைபெற்றது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு உக்ரைன் தொடர்ந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நிலைமை இன்னும் மோசமாகி வருகின்றது .
சோலேடார் நகரத்தை கைப்பற்றுவது முக்கியம் என்று நினைக்கும் ரஷ்யா, தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் ரஷ்ய உக்ரைன் போர் மீண்டும் தீவிர மடையும் சுழல் ஏற்பட்டுள்ளது . 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வடகிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில், தொடர்ந்து பின்வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருந்த ரஷ்யா, சோலிடரைக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருந்தது.