கூகுள் மேப் காட்டிய வழி; ஆற்றில் கவிழ்ந்த கார் - 2 பேர் பலி!
கூகுள் மேப்பை பார்த்து கார் ஓட்டிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கூகுள் மேப்
கேரளா, கொட்டாரக்கரை எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஜார்ஜ் (48). இவர் மகாராஷ்டிரா, துணைவியில் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இவர் 27 வயது இளைஞருடன் கேரளாவை சுற்றி பார்ப்பதற்கு புனேவிலிருந்து வந்துள்ளார். இதற்காக கோட்டயம் பகுதியில் வாடகைக்கு கார் ஒன்றை எடுத்துக் கொண்டு இருவரும் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். கூகுள் மேப்பை பயன்படுத்தி காரை இயக்கியதாக கூறப்படுகிறது.
இருவர் பலி
அந்த சமயத்தில் வேகமாக காரில் சென்ற போது அந்த கார் திடீரென அருகில் இருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்துள்ளது. இதனால் காருக்குள் நீர் புகுந்து மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அவ்வழியாக வந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தொடர்ந்து விரைந்த போலீஸார் ஆற்றில் கவிழ்ந்து மூழ்கிய காரை நீண்ட நேரம் போராடி வெளியே எடுத்தனர். பின் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இரண்டு பேரும் சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் வழி தெரியாததால் கூகுள் மேப்பை பார்த்து காரை இயக்கியது தெரியவந்துள்ளது.