எமனாக வந்த நூடுல்ஸ்!! 8 வயது சிறுவன் துடி துடித்து மரணம்!!
நூடுல்ஸ் சாப்பிட்டு கேரளா சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ள செய்தி அதிரவைத்துள்ளது.
நூடுல்ஸ்
இந்திய சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்த ஒரு உணவாக உள்ளது நூடுல்ஸ். செய்வதும் சுலபம், சாப்பிடுவதிலும் ருசி அதிகம், விலையும் குறைவு என்ற காரணங்களால் பலரும் இதனை எளிதில் விரும்புவிடுகிறார்கள்.
சீனா நாட்டு உணவான நூடுல்ஸ், பல நாடுகளிலும் பிரதான சிற்றுண்டி உணவாகிவிட்டது. இதனை பலரும் உண்டு வரும் நிலையில், அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
மரணம்
அதாவது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் அடிமாலி என்ற கிராமத்தை சேர்ந்த ஜோவானா என்ற 8 வயது மாணவன் நூடுல்ஸ் உண்டு மரணமடைந்துள்ளார்.
சோஜன் - ஜீனா தம்பதியின் மகனான 3 வகுப்பு மாணவன், வீட்டில் நூடுல்ஸ் சாப்பிட்டு கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென தொண்டையில் அவருக்கு நூடுல்ஸ் சிக்கியுள்ளது.
இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை இடுக்கி மருத்துவமனையில் அனுமதித்தும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
தொண்டையில் நூடுல்ஸ் சிக்கி, சிறுவன் ஒருவன் மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.