உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி: இவ்வளவு ஆபத்தா - மயோனைஸ் விற்பனைக்கு தடை!
முட்டை கலந்த மயோனைஸ் என்ற உணவுப் பொருளுக்கு தடைவிதித்து கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மயோனைஸ்
கடந்த சில மதங்களாவே கேரளாவில் நச்சு கலந்த உணவுப்பொருட்களை உண்பதால் உயிரிழப்புகள் ஏற்படும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக கேரள அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து வெளியிட்ட செய்தி குறிப்பில், கடந்த வாரம் மாநிலம் முழுவதும் நடைபாதை விற்பனை நிலையங்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அவற்றில் தரமற்ற உணவை வழங்கியதாக 60 ஹோட்டல்கள் நிரந்தரமாக மூடப்பட்ட நிலையில்,
விற்பனைக்கு தடை
120 ஹோட்டல்களுக்கு அபராத தொகையும் விதிக்கப்பட்டன. நடத்தப்பட்ட சோதனைகளில் உணவகங்களில் தற்போது தயாரிக்கப்படும் உணவுகளில் அதிகமாக முட்டை கலந்த மயோனைஸ் என்ற உணவுப் பொருள் கலக்கப்படுவதும், அந்த பொருளால் அதிக உயிரிழப்புகள் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் பல்வேறு பரிசோதனை முடிவுகளில் வெளிவந்துள்ளது.
அதனால் மயோனைஸ் என்ற உணவுப்பொருளை தடை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது என்று கூறினார். மேலும் இதனை அதிக அளவில் சாப்பிடும் போது புற்றுநோய், இதய நோய், கல்லீரல் கோளாறுகள் போன்றவை ஏற்படும். இதில் சேர்க்கப்படும் எண்ணெய் அதிக கொழுப்பு நிறைந்தது. அதாவது ஒரு ஸ்பூன் மயோனைஸ் 94 கலோரிகளைக் கொண்டது.
எனவே இது உடலில் கலோரி அளவை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கும் என்பதால் இது மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுகிறது. இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளர்களும் தாவர எண்ணெய் அடிப்படையிலான மயோனைஸைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.