தந்தூரி சிக்கனுக்கு மயோனைஸ் தராததால் போர்க்களமான ஹோட்டல் - வைரலாகும் வீடியோ!
தந்தூரி சிக்கனுக்கு மயோனைஸ் தராததால் ஹோட்டல் ஊழியர்களும், உணவு அருந்த வந்தவர்களும் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சிக்கனுக்கு மயோனைஸ்
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது "கசாலி" என்ற உணவகம். இந்த உணவகத்தில் மணிகண்டன் மற்றும் சிவபெருமான் என்ற இருவர் உணவு உண்பதற்காக வந்துள்ளனர்.
தந்தூரி சிக்கனை ஆர்டர் செய்த அவர்கள் அதற்கு மயோனைஸையும் தருமாறு கேட்டுள்ளனர். அனால் அரை தந்தூரிக்கு மட்டுமே மயோனைஸ் தரப்படும் என ஹோட்டல் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
அடிதடி
இதனால் கோவம் அடைந்த இருவரும் ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் இறுதியில் கைகலப்பாக மாறியது. தந்தூரி சிக்கனுக்கு மயோனைஸ் தராததால் இவர்கள் போட்டுக்கொள்ளும் சண்டை காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து தற்போது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .