கோடிக்கணக்கான இந்திய காகங்களை தேடி தேடி கொல்லும் நாடு - இப்படி ஒரு காரணமா?
இந்த ஆண்டு இறுதிக்குள் 1 கோடி இந்திய காகங்களை கொல்ல கென்யா அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய காகங்கள்
இந்திய காகங்கள் 1940 களில் கென்யா போன்ற கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளுக்கு இடம் பெயர்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த காகங்கள் வீட்டு காகம், சாம்பல் கழுத்து காகம் இந்திய காகம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இந்த காகங்கள் தங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் வெகுகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது இந்த கோரிக்கையை செயல்படுத்த கென்யா அரசு முடிவு எடுத்துள்ளது. இதனையடுத்து 2024 இறுதிக்குள் 1 கோடி இந்தியா காகங்களை அழிக்க வேண்டும் என கென்யா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டுப் பறவைகள்
இந்த காகங்கள் சுற்றுலா பயணிகள் உணவு உண்ணும் போது பெரும் இடையூறு செய்வதாக ஹோட்டல் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அங்குள்ள உள்நாட்டுப் பறவைகளின் கூடுகளை அழித்து அவற்றின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளை வேட்டையாடுவதன் மூலமாக உள்ளூர் பறவை இனங்களை காகங்கள் அழிக்கிறது.
இந்த காகங்களால் நாங்கள் எப்போதும் கோழி குஞ்சுகளை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டிய நிலைக்கு எங்களை தள்ளியுள்ளது. மேலும், தாய் கோழிகளின் கவனத்தை திசை திருப்பி விட்டு குஞ்சுகளை தூக்கி செல்வதாக விவசயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.