ஏசுவைக் காண பட்டினி கிடந்து உயிரை விட்ட 400 பேர்; தோண்ட தோண்ட சடலம் - பகீர் பின்னணி!
பாதிரியார் ஒருவரது பண்ணையில் தோண்ட தோண்ட சடலங்களாக வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூடநம்பிக்கை
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் மாலிண்டி நகரைச் சேர்ந்தவர் பால் மெகன்சி. இவர் மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியாராக உள்ளார். இந்நிலையில், அவருக்கு சொந்தமான பண்ணையில் 15க்கும் மேற்பட்டோர் உடல் மெலிந்து இருப்பதாகவும்,
அவர்களில் நான்கு பேர் இறந்து விட்டதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில், 21 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
400 பேர் பலி
இதுகுறித்து விசாரித்ததில் பட்டினி கிடந்தால் இறைவனைச் சந்திக்க முடியும் என பாதிரியார் கூறியதை தொடர்ந்து, தாங்கள் பட்டினி கிடப்பதாக அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி காரணத்தை கூறியுள்ளனர். அதன் அடிப்படையில், பாதிரியார் கைது செய்யப்பட்டார்.
800 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் ஷாகஹோலா காடு முழுவதும் சீல் வைக்கப்பட்டு, குற்றம் நடந்த இடமாக அறிவிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 400 ஆகக் அதிகரித்துள்ளது.
7 குழந்தைகளின் தந்தையான பால் மெக்கன்சி மீது பயங்கரவாதம், சட்டவிரோத பணமாற்றம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன. தற்போது பால் மெக்கன்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.