ரூ.56 கோடியில் 12 தங்க கழிப்பறைகள்.. அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இத்தனை வசதிகளா? வெளியான அதிர்ச்சி வீடியோ!
கெஜ்ரிவாலின் இந்த குடியிருப்பில் தங்கத்தில் முலாம் பூசப்பட்ட 12 கழிப்பறைகள் உள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் தலைநகரில் அரசியல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால் தேர்தல்கள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முக்கிய கட்சிகளான ஆம் ஆத்மி கட்சி (AAP),பாரதிய ஜனதா கட்சி (BJP), மற்றும் காங்கிரஸ் ஆகிய அனைத்து முக்கிய கட்சிகளும் முக்கியமான தேர்தலுக்கு வியூகம் வகுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக இருந்த போது தனது ஷீஷ்மஹால் பங்களாவுக்குள் எப்படி ஆடம்பரமாக இருந்துள்ளார் என்பது குறித்து வீடியோ ஒன்றை பாஜக ஐடி விங் வெளியிட்டுள்ளது.
தங்க முலாம் கழிப்பறைகள்
அந்த வீடியோவில்,உடற்பயிற்சி கூடம், பிரம்மாண்ட குளியலறை, தங்கத்தில் முலாம் பூசப்பட்ட 12 கழிப்பறைகள் ,பங்களாவில் மார்பிள் கிரானைட்பொறுத்தபட்ட அறை எனக் தனக்கென 7-ஸ்டார் உல்லாச விடுதியைக் கட்டியுள்ளதாக பாஜக கூறியுள்ளது.
இந்த கழிப்பறைகள் ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ. 1.44 கோடி. மொத்தம் ரூ.56 கோடி மதிப்புள்ள மதிப்பும் கழிப்பறைகள் நிறுவப்பட்டன. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும் பொது நிதியை வீணடித்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து பாஜக தலைவர் ஆர்.பி.சிங் கூறுகையில் ஆம் ஆத்மி அரசாங்கம் இலவச சலுகைகள், வாக்குறுதிகள் மூலம் டெல்லி மக்களைத் தவறாக வழிநடத்துகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.