சிறுத்தையைப் பிடிக்க கொசு வலையுடன் சென்ற பாஜக தலைவர்.. மிரண்ட கிராம மக்கள் - பின்னணி என்ன?
சிறுத்தையைப் பிடிக்கக் கொசுவலையுடன் பாஜக தலைவர் ஒருவர் புறப்பட்டுச் சென்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.
சிறுத்தை
வடமாநிலங்களில் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். அப்படி சில சமயங்களில் குடியிருப்பு பகுதிக்கு வரும் சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்கிவிட்டுச் செல்லும்.
இது குறித்து வனத்துறைச் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டாலும், இது தொடர் கதையாகவே உள்ளது.அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா என்ற இடத்தில் சிறுத்தை ஒன்று 5 பேரைத் தாக்கியது.
ஆக்சிஜன் குழாயைத் திருடி சென்ற மர்ப நபர்..உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தைகள் - நள்ளிரவில் நடந்த அவலம்!
இதில் 2 பேரின் நிலைமை கவலை கிடமாக உள்ளது.இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை மனிதர்களைத் தாக்கும் சிறுத்தை பிடிபடவில்லை எனக் கூறப்படுகிறது.
பாஜக தலைவர்
இதனையடுத்து பா.ஜ.க பிரமுகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சியாம்லால் திவேதி உள்ளூர் மக்களை அழைத்துக் கொண்டு கையில் சிறுத்தையைப் பிடிக்கக் கொசுவலையுடன் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இது குறித்து பாஜக பிரமுகர் கூறுகையில்,’’சிறுத்தை பயத்தால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரப் பயப்படுகின்றனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினோம் ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.
மேலும் சிறுத்தையைப் பிடிக்கும் வரை நான் இங்கேயே முகாமிடவும் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.