பாஜக வென்றால் அமித் ஷாதான் பிரதமர் - அலறவிட்ட கெஜ்ரிவால்!
அமித் ஷாவை பிரதமராக ஆக்குவதற்காகவே மோடி வாக்கு கேட்கிறார் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை தொடர்பன வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் பேசினார். அப்போது, மோடி தனக்காக வாக்கு கேட்கவில்லை. அமித் ஷாவை பிரதமராக ஆக்குவதற்காகவே மோடி வாக்கு கேட்கிறார்.
மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றப்போவது யார் என்ற கேள்வியை அமித் ஷா, மோடி ஆகிய இருவரிடமும் நான் கேட்கவிரும்புகிறேன். பாஜக-வுக்கு வாக்களிக்கப் போகிறவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் வாக்களிக்கப்போவது மோடிக்கு அல்ல. அமித் ஷாவுக்குத்தான் நீங்கள் வாக்களிக்கப்போகிறீர்கள்?
ஒரே தலைவர்
ஒரே தலைவர் என்ற ஆபத்தான ஒரு திட்டத்தை பிரதமர் மோடி ஆரம்பித்திருக்கிறார். இந்தத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பினராயி விஜயன்,
உத்தவ் தாக்கரே உள்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து பாஜக ஆதரவு வேட்பாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.