நான் அவரு பொண்டாட்டி மாதிரி பேசுனாரு; அவன் அத எதிர்பார்ப்பான் - கீர்த்தி சுரேஷ் பகீர்!
தனது வாழக்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்
கீர்த்தி சுரேஷ்
'இது என்ன மாயம்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீம ராஜா, சர்க்கார், அண்ணாத்த, மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'நடிகையர் திலகம்' படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் சாவித்ரியாக வாழ்ந்து அனைவரையும் ரசிக்க கவர்ந்தார் கீர்த்தி சுரேஷ்.
கடைசியாக இவர் நடிப்பில் 'சைரன்' திரைப்படம் வெளியாகியிருந்தது. நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் தனது வாழக்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
வைஃப் மாதிரி
அவர் கூறியதாவது "என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி அடிக்கடி ஒருத்தர் கிட்ட இருந்து லெட்டர் வந்துகிட்டே இருந்துச்சு. அந்த லெட்டர் பேர், அட்ரஸ் எல்லாம் போட்டே வரும். அவன் என்கிட்டே இருந்து பதில் எல்லாம் எதிர்பார்ப்பான்.

அதேபோல இன்னொருத்தர் வீடு தேடியே வந்தாரு. ஆனால், அவர் கொஞ்சம் வேற மாதிரி இருந்தாரு. நான் அப்போ வீட்டில் இல்லை. வீட்டில் வேலை செய்றவங்க தான் இருந்தாங்க. இவர் நேரா அவங்க கிட்டப் போய், ஏன் கீர்த்தி இந்த படம்லாம் பன்றா..? ஏன் அந்த படம்லாம் பன்றா..? அப்படின்னு கேட்ருக்காரு. ஏதோ நான் அவரு வைஃப் மாதிரியே பேசிட்டு இருந்துருக்காரு" என்று பேசியுள்ளார்.
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil