சமுதாயமே குட்டிச் சுவராகி நாசமா போனதுக்கு 'ராதிகா' தான் காரணம் - பிரபலம் பளீச்!
நடிகை ராதிகா சரத்குமார் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேசியுள்ளார்.
நடிகை ராதிகா
கிழக்கே போகும் ரயில் என்ற பாரதிராஜாவின் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும், வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சூப்பர் ஹிட் சீரியலில் நடித்து கொடிகட்டி பறந்த ஒரு நடிகையும் ஆவார். இந்நிலையில் மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.
அந்த பெட்டியில் நடிகை ராதிகா குறித்து பேசிய அவர் "ராதிகாவின் நடிப்பு மிகப் பிரமாதமாக இருக்கும். கிழக்கு சீமையிலே படத்தில் எல்லாம் ராதிகாவின் நடிப்பு அருமையாக இருக்கும். எல்லா கதாபாத்திரங்களுக்கும் அவர் சூட் ஆவார்.
புது உருவம்
மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தில் மன நிலைமை இழந்த பெண்ணாக நடித்திருப்பார், அந்த படமும் சரி, ராதிகாவின் நடிப்பும் சரி நன்றாக இருக்கும். சீரியல்களுக்கு புது உருவம் கொடுத்ததே ராதிகா தான். அவரின் 'சித்தி' என்ற ராதிகாவின் சீரியல்தான், சீரியலையே அறிமுகப்படுத்தியது .
இன்றைக்கு நமது சமுதாயமே குட்டிச் சுவராகி நாசமாக போனதிற்கு முக்கிய காரணமே ராதிகா தான்" என்று சிரித்துக் கொண்டே பேசியுள்ளார். மேலும் பேசிய அவர் "ராதிகாவின் சித்தி சீரியலை பார்த்து அடிக்டாக்கி இன்னமும் அதில் இருந்து வெளியில் வர முடியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறோம்.
சீரியல்களுக்கு பெரிய மார்க்கெட் கொடுத்ததே அவர் தான். தமிழ் சீரியல் உலகின் தாய் என்று ராதிகாவை கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். வரிசையாக ராதிகா நடித்த 4 சீரியல்கள் சூப்பர் ஹிட்" என்று தெரிவித்துள்ளார்.