15 வருட காதல் - காதலருடன் உள்ள படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலருடன் உள்ள படத்தை பகிர்ந்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பைரவா, சர்க்கார், அண்ணாத்த என பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பாலிவுட் பேபி ஜான் என்ற படம் மூலம் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் பாடல் கூட சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
15 வருட காதல்
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கீர்த்தி சுரேஷிற்கும் அவரது நீண்ட கால நண்பர் ஆண்டனி தட்டிலை டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது குறித்து கீர்த்தி சுரேஷ் எதுவும் அறிவிக்காமல் இருந்தார்.
தற்போது தனது காதலருடன் உள்ள படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், காதல் தொடரும் எப்போதும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த காதல் ஜோடிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
யாழை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை நாடு கடத்தும் விவகாரம்! மதுரை உயர் நீதிமன்றின் விசேட தீர்மானம் IBC Tamil