கிரிக்கெட் அணியின் உரிமையாளரான கீர்த்தி சுரேஷ் - எந்த அணி தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷ் கிரிக்கெட் அணியின் இணை உரிமையாளராக இணைந்துள்ளார்.
கிரிக்கெட்
இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. அதை கருத்தில் கொண்டு இந்தியாவின் முக்கிய நகரங்களின் பெயரில் கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு முதல் IPL போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அணிகளுக்கு உரிமையாளராக பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் இருந்து வருகிறார்கள்.
IPL போட்டிகளுக்கு அமோக ஆதரவு கிடைத்ததையடுத்து, மாநில அளவில் உள்ள முக்கிய நகரங்களின் பெயர்களில் கிரிக்கெட் அணிகளை உருவாக்கி அந்த மாநில கிரிக்கெட் சங்கங்கள் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது.
கீர்த்தி சுரேஷ்
கேரளாவிலும், இதே போல் 6 நகரங்களின் பெயர்களில் அணிகள் உருவாக்கப்பட்டு செப்டம்பர் மாதம் முதல் கேரளா கிரிக்கெட் லீக்(Kerala Cricket League) நடத்த உள்ளது கேரள கிரிக்கெட் சங்கம். இந்த போட்டிக்கு விளம்பர தூதராக நடிகர் மோகன்லால் செயல்படுகிறார்.
Subsequent to being the Ambassador for Kerala Cricket Association, Woman’s team, I am now extremely kicked about being a Co-owner for @trivandrumroyal, Kerala Cricket League.
— Keerthy Suresh (@KeerthyOfficial) August 18, 2024
Cricket has always been a passion and part of life and to see this come together gives me great joy!… https://t.co/Zcg9AmtbWw
இந்நிலையில் திருவனந்தபுரம் ராயல்ஸ் (Trivandrum Royals) அணியின் இணை உரிமையாளராக நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்சனும் இந்த அணியின் மற்றொரு இணை உரிமையாளராக உள்ளார். ஏற்கனவே கேரள பெண்கள் கிரிக்கெட் அணிக்கான விளம்பர தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ்நியமிக்கபட்டிருந்தார்.