233 நாட்கள் விடாத ரசிகர்...! வேறுவழியின்று கீர்த்தி சுரேஷ் செய்த செயல்..!

Keerthy Suresh
By Karthick Jan 25, 2024 06:57 AM GMT
Report

நீண்ட நாட்களாக தொடர்ந்து ட்வீட் செய்து வந்த ரசிகர் ஒருவர்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் மன்னிப்பு கோரியுள்ள சம்பவம் வைரலாகி வருகின்றது.

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து பிஸியான நடிகையாக வளம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்திருந்த உதயநிதியின் "மாமன்னன்" படம் மிக பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது.

keerthy-suresh-replies-to-fan-after-233-days-

தற்போது ஹிந்தியில் அட்லீ தயாரிப்பில் வருண் தவான் நாயகனாக நடிக்கும் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான "தெறி" படத்தின் ரீமேக்கில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியிருக்கின்றார்.

keerthy-suresh-replies-to-fan-after-233-days-

இத்துடன் சேர்த்து தமிழில் ரகு தாத்தா, சைரன் போன்ற படங்களுக்கும் இவர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகரின் பிடிவாதம்..

தற்போது ரசிகர் ஒருவருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சமூகவலைத்தளத்தின் மூலம் மன்னிப்பு கேட்டுள்ள செய்தி வெளியாகியிருக்கின்றது.

அந்த நடிகை மீதுதான் ஆசை; ஆனால் கிடைச்சது கீர்த்தி சுரேஷ் தான் - விஜய் கலகல..

அந்த நடிகை மீதுதான் ஆசை; ஆனால் கிடைச்சது கீர்த்தி சுரேஷ் தான் - விஜய் கலகல..

கீர்த்தி சுரேஷின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு கடந்த 233 நாட்களாக தொடர்ச்சியாக ட்வீட் செய்து கீர்த்தியின் ரிப்ளை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வந்துள்ளார்.

keerthy-suresh-replies-to-fan-after-233-days-

இந்த டீவீட்டிற்கு 234-வது நாளில் கீர்த்தி சுரேஷ், "234 fancy நம்பர், தாமதமாக ரிப்ளை செய்ததற்கு மன்னிக்கவும் - நிறைய காதல்களுடன்" என்று பதில் கொடுத்துள்ளார்.