நான் சிங்கிள் இல்லையே - வெளிப்படையாக அறிவித்த கீர்த்தி சுரேஷ்
சிங்கிளாக இருக்கிறோம் என பீல் பண்ணி இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் பதிலளித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாக்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தில் அறிமுகமாகி ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பைரவா, சர்க்கார், அண்ணாத்த என பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அட்லீ இயக்கத்தில் வருண் தவனுக்கு ஜோடியாக பேபி ஜான் என்னும் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். மேலும், ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா, கன்னி வெடி என்னும் படங்களில் நடித்து வருகிறார்.
சிங்கிள்
இதில் ராகு தாத்தா திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் முழு மூச்சாக இறங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் "தனியாக இருக்கிறோம் என எப்பொழுதாவது ஃபீல் பண்ணியதுண்டா" என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நான் சிங்கிளா இருக்கேன்னு சொல்லவே இல்லையே" என பதிலளித்துள்ளார்.
இந்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில், கீர்த்தி சுரேஷ் காதலில் உள்ளார் ஆனால் யாரை காதலிக்கிறார் என தெரியவில்லை என ஒரு தரப்பினரும், அவர் குடும்பத்துடன் உள்ளதை தான் அப்படி சொல்லி உள்ளார் என மற்றோரு தரப்பினரும் சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.