Friday, May 2, 2025

இதுக்காகவே ஆட்சி மாற்றம் வரணும் -என் ஆசை!!தாமரை மலரனும் - கீர்த்தி சுரேஷ் அம்மா

Keerthy Suresh BJP Kerala Lok Sabha Election 2024
By Karthick a year ago
Report

கேரளா மாநிலத்தின் மக்கலவைக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது.

2-ஆம் கட்ட தேர்தல்

மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. கேரளா(20), கர்நாடகா(14), அசாம்(5), பீகார்(5), சத்தீஸ்கர்(3), மத்தியபிரதேசம்(6), மகாராஷ்டிரா(8), மணிப்பூர் (1/2), ராஜஸ்தான்(13), திரிபுரா (1), உத்தரப்பிரதேசம் (8), மேற்குவங்கம் (3), ஜம்மு காஷ்மீர் (1) என மொத்தமாக 87 1/2 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு மும்முராக நடைபெற்று வருகின்றது.

keerthy-suresh-mom-menaka-suresh-bjp-should-win

தமிழகத்தின் அண்டைமாநிலமான கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி, பாஜகவின் NDA கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது.

பாஜக தான் மலரனும்

கேரளா பாஜகவின் மாநில பொறுப்பில் இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேந்திரன். இவரின் மனைவியும் நடிகையுமான மேனகா சுரேஷ் இன்று வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

keerthy-suresh-mom-menaka-suresh-bjp-should-win

அவர் பேசும் போது, கேரளாவில் மாற்றம் இருந்தால் நன்றாக இருக்கும்.

சேட்டன்கள் மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா பாஜக? கேரளா மக்களவை தேர்தல் ஒரு பார்வை

சேட்டன்கள் மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா பாஜக? கேரளா மக்களவை தேர்தல் ஒரு பார்வை

கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தாலே தெரியும். புதிய ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும். என்னை பொறுத்தவரை தாமரை மலர வேண்டும் அதுவே எனது ஆசை என்றார்.

keerthy-suresh-mom-menaka-suresh-bjp-should-win

கேரளாவில் இதுவரை பாஜக வெல்லவில்லை. இங்கு LDF - UDF தான் இருந்து வருகிறது. இவர்கள் தான் மாறி, மாறி இருக்கிறார்கள். மாற்றம் வந்தால் நன்றாக இருக்கும். பாஜக 10 தடவை கிழே விழும் போது 11வது முறை எழுந்திருக்க மாட்டார்களா.? கேரளாவில் தாமரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதுவும் குறிப்பாக திருச்சூரில் சுரேஷ்கோபி வெற்றி பெறுவார்.