எம்.பி தேர்தலில் கீர்த்தி சுரேஷ் வீட்டார்..? அதுவும் இந்த கட்சியா - பிரச்சாரம் செய்வாரா கீர்த்தி...?
பிரபலங்களை குறித்து வைத்து தேர்தல் அரசியலை எதிர்கொள்வதை பல கட்சிகளும் கையாளும் ஒரு யுக்தியே.
கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி படங்கள் என பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் வீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உருவாக இருக்கின்றார்.
இது குறித்து முன்னரே தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த செய்தி கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்படவிட்டது என்றே கூறலாம் என்ற அளவிற்கு செய்திகள் வெளிவருகின்றன.
மலையாள திரையுலகில் பிரபல தயாரிப்பாளரான கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ், கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார்.
தேர்தலில் போட்டி
இவருக்கு தான் தற்போது எம்.பி வழங்கப்படவாய்ப்பிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சசிதரூரை எதிர்த்து திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட பாஜக பார்த்து வைத்துள்ள பெயர் பட்டியலில் சுரேஷ் பெயரும் இருப்பதாக கூறப்படுகிறது.
அது இறுதியானால், அவர் தேர்தலில் களமிறங்குவது உறுதியான ஒன்றாகும்.
தந்தை தேர்தல் அரசியலில் வரும் நிலையில், அவருக்காக மகள் கீர்த்தி சுரேஷ் பிரச்சாரம் மேற்கொள்ளவரா..? என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.