இதெல்லாம் பிடிக்கல.. விஜய் மேல இவ்வளவு வன்மமா? கீர்த்தி சுரேஸ் அப்பா காட்டம்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய் படம் குறித்து கீர்த்தி சுரேஸ் தந்தையின் கருத்து வைரலாகி வருகிறது.
சுரேஷ்குமார்
தமிழில் பைரவா மற்றும் சர்க்கார் என இரு படங்களில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். முன்னதாக, கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அண்மையில் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், மலையாளத் துறை உலகின் பிரபல தயாரிப்பாளரும், கீர்த்தி சுரேஸின் அப்பாவுமான சுரேஷ்குமார்,
லியோ திரைப்படம்
இந்த ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய லியோ திரைப்படம் தனக்கு பிடிக்கவில்லை என்றும் எப்படி ஒரே ஆள் 200 பேரை கிளைமாக்ஸில் அடிக்கிறாரோ தெரியவில்லை.
இதெல்லாம் சூப்பர் ஹீரோ படங்கள் போலத்தான் உள்ளன. சாமானிய மக்கள் இந்த படங்களுடன் கனெக்ட் செய்ய முடியவில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு விஜய்யின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது, இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.