அவருக்கு கூட 3-வது தடவை ?? 3-வது முறை ஒப்புக்கொண்ட கீர்த்தி சுரேஷ்!!

Vijay Keerthy Suresh Samantha
By Karthick Apr 26, 2024 08:15 PM GMT
Report

 கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக வெளியான படம் "சைரன்".

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து பிஸியான நடிகையாக வளம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக நடித்து வரும் இவருக்கு தற்போது இந்தி பட வாய்ப்புகள் வர துவங்கியுள்ளன.

keerthy-suresh-3rd-time-joining-with-vijay

அட்லீ இயக்கத்தில் தமிழில் வெளியான விஜய்யின் "தெறி" படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவனுடன் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதே போல, தமிழில் ரகு தாத்தா படத்திலும் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார் கீர்த்தி சுரேஷ்.

keerthy-suresh-3rd-time-joining-with-vijay

மகாநடி படத்திற்காக தேசிய விருது, பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கவும் முன்னணி தேர்வாக இருக்கிறார். அப்படித்தான் ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

3-வது முறையாக

நடிகர் விஜய் விரைவில் சினிமாவில் இருந்து விலகவுள்ளார். அதன் காரணமாகவே அவரின் 69-வது படம், அவரின் கடைசி படம் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தை இயக்கப்போவது யார்? நடிகர் நடிகர்கள் யார்? கதைக்களம் என்ன என்பது? போன்ற பல எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

keerthy-suresh-3rd-time-joining-with-vijay

தயாரிப்பாளர்களாக இணைய AGS மற்றும் பேஷன் ஸ்டூடியோ ஆகிய நிறுவனம் இப்படத்தை கைப்பற்று ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் சமீபத்திய அப்டேட் தான் இது.

இதுக்காகவே ஆட்சி மாற்றம் வரணும் -என் ஆசை!!தாமரை மலரனும் - கீர்த்தி சுரேஷ் அம்மா

இதுக்காகவே ஆட்சி மாற்றம் வரணும் -என் ஆசை!!தாமரை மலரனும் - கீர்த்தி சுரேஷ் அம்மா

படத்தில் விஜய்யுக்கு ஜோடியாக நடிக்க 2 நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், படத்தில் கீர்த்தி சுரேஷ் இன்னொரு நாயகியாக இணைகிறார் என கூறப்படுகிறது.

keerthy-suresh-3rd-time-joining-with-vijay

அப்படி கீர்த்தி இப்படத்தில் இணைந்தால் அவர், விஜய்யுடன் நடிக்கும் 3-வது படமாக சர்க்கார் மற்றும் பைரவா படங்களுக்கு பிறகு இது அமையும்.