நாம ஜெயிச்சிட்டோம் மாறா..! கோப்பையுடன் கொண்டாட்டத்தில் காவ்யா மாறன்..!
தயாரிப்பாளர் தயாநிதி மாறனின் மகளான காவ்யா மாறன் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியின் உரிமையாளராகவும் இருக்கின்றார்.
காவ்யா மாறன்
ஹைதராபாத் அணியின் ஆதரவாளர்களை தாண்டி, மற்ற அணியின் ஆதரவாளர்களும் ஹைதராபாத் அணியின் போட்டியை காண முக்கிய காரணமே காவ்யா மாறன்.
மைதானத்தில் தனது அணியின் வெற்றி தோல்வியை பல்வேறு வகைகளில் கொண்டாடி தீர்க்கும் காவ்யாவின் செயல்பாடுகளை தான் பலரையும் கவர்ந்த ஒன்றாக இருக்கின்றது. ஆனால், ஹைதராபாத் அணி தொடர்ந்து சொதப்பலான நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் நீடித்து வருகின்றது.
ஆனால், தற்போது மற்றொரு வகையில் காவ்யா மாறன், கோப்பையை வென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சவுத் ஆப்ரிக்காவில் நடைபெற்ற SA20 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்று சாதனை படைத்துள்ளது.
இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 17 ஓவர்களில் 115 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
Kavya Maran Mam has something to say ?️?
— SunRisers OrangeArmy Official (@srhfansofficial) February 10, 2024
.
.
.#Sec #SunrisersEasternCape #Orangeramy pic.twitter.com/UbS6uiWVBy
கோப்பையை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியினருடன் காவ்யா மாறன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.