அடி மேல் அடி வாங்கிய சன்ரைசர்ஸ் - கண்ணீர் விட்ட காவ்யா - கலங்கிய ரசிகர்கள்
தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் சன்ரைசர்ஸ் அணியின் காவ்யா மாறன் அழுத காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சறுக்கிய ஹைதராபாத்
லீக் ஆட்டங்களில் பெரிய பெரிய ஸ்கோர்களை அடித்து மிரள வைத்த சன்ரைசர்ஸ் அணி நேற்று இறுதி போட்டியில் பெரிய சறுக்கலை சந்தித்தது.
அதிரடி துவக்கம் அமைத்து வந்த டிராவிஸ் ஹெட் 0 ரன், அபிஷேக் சர்மா 2, ராகுல் திரிபாதி 9, மார்க்ரம் 20, நிதிஷ் குமார் ரெட்டி 13, கிளாசன் 16, அஹ்மத் 8, சமாத் 4, பேட் கம்மின்ஸ் 24, ஜெயதேவ் 4 என அனைவருமே சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
ஒவ்வொரு முறையும் அசத்தலாக ஹைதராபாத் அணி விளையாடிய போது, காலரியில் இருந்து ஆரவாரமாக கொண்டாடிய காவ்யா மாறன், நேற்று பெரும் சோகத்துடனே இருந்தார்.
She deserves a Cup ??#KavyaMaran #KKRvsSRHFinal #IPLFinal pic.twitter.com/6y1ls4CVAv
— IPL FOLLOWER (@BiggBosstwts) May 27, 2024
நேற்றைய தினம் முழுவதுமே அவருக்கு கொண்டாட ஒரு சின்ன இடம் கூட கிடைக்கவில்லை. மனமுடைந்த போன காவ்யா மாறன் கடைசியில் அழுத படியே பாதியிலேயே வெளியேறினார்.
113 ரன்களை சேசிங் செய்த கொல்கத்தா அணி 2 விக்கெட் மட்டுமே இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது முறை கோப்பை வென்று அசத்தியுள்ளது கொல்கத்தா அணி.