எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா? மெகா Auction தேவையில்லை தான் - காவ்யா மாறன்
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக, மெகா auction நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் 2025
அடுத்த ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் இறுதியில் தொடருக்கு முன்பாக மெகா auction நடத்த BCCI திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்பாக, அணியின் உரிமையாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றுள்ளது.
அதே நேரத்தில், இந்த Auction தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை அணிகள் தரப்பில் வைக்கப்பட்டு வருகின்றன. ஆலோசனை கூட்டத்தில், மெகா auction நடத்த நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
காவ்யா மாறன் கருத்து
அதே நேரத்தில், இந்த கூட்டம் முடிந்த பிறகு இது குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் காவ்யா மாறன் பேசும் போது, "ஒரு அணியை உருவாக்க நிறைய நேரம் எடுக்கும், மேலும் இளைய வீரர்கள் போட்டிக்கேற்ப தயாராக சிறிது நேரமும் முதலீடும் தேவை.
அபிஷேக் ஷர்மாவின் செயல்பாடுகளுடன் ஒத்துப்போவதற்கு மூன்று வருடங்கள் எடுத்தது. அதனை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். மற்ற அணிகளிலும் இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என்று என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.
கொல்கத்தா அணிக்கு சாதகமாக சன்ரைசரஸ் அணி பேசியுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக இறுதி முடிவு என்பது பிசிசிஐ கையில் தான் உள்ளது. தற்போதைய சூழலின் படி மெகா auction நடைபெறும் நிலையில் தான் இருக்கிறது.