மீண்டும் மோடி ஆட்சி வந்தால் - இது தான் நிலை - கதிர் ஆனந்த் காரசார பிரச்சாரம்
வேலூர் மக்களவை தொகுதியில் திமுகவில் மீண்டும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் கதிர் ஆனந்த்.
கதிர் ஆனந்த்
திமுகவின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கினார்.
வேலூர் மக்களவை தொகுதியில் களமிறக்கப்பட்ட அவர், 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக வேலூர் மக்களவை தொகுதியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆளும் திமுகவின் திட்டங்கள், பாஜகவின் எதிர்பலையும் மீண்டும் அவருக்கு கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.
அரசியலுக்கு வரவில்லை..
இந்நிலையில் தான் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியது வருமாறு, கேள்வி - நீங்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் என்னவாகியிருப்பீர்கள்..?
கதிர் ஆனந்த் பதில் - அரசியலுக்கு வரவில்லை என்றால் என்னவாகியிருப்பேன் என்று தெரியாது.
நல்ல குடும்பத்தலைவனாக இருந்திருப்பேன். மசாலா ஏற்றுமதி தொழில் உள்ளது. +2 ஆம் வகுப்பில் இருந்தே அத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு உணவு மிகவும் பிடிக்கும். அதே போல கல்வி நிறுவனங்கள் உள்ளது. அந்த நிறுவனங்களில் இன்னும் ஆர்வமாக பணியாற்றியிருப்பேன்.
மீண்டும் மோடி ஆட்சி
பிரச்சாரத்தில் தீவிரமாக மோடி அரசை கடுமையாக விமர்சித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு அவர் பேசியது வருமாறு,
10 ஆண்டுகளுக்கு முன் 400 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது 1200 ரூபாயாக உயர்ந்துள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டரின் விலை 2000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.
அதே போல தங்கத்தின் விலை தற்போது கால் லட்சத்தைத் தாண்டியுள்ளது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் பிரதமர் மோடி ஆட்சி தொடரவே கூடாது