கலைஞருக்கு...அன்றைக்கே தவறு என்று எழுதினார்கள் - கச்சத்தீவு விவகாரம் - துரைமுருகன் பரபரப்பு கருத்து
கச்சத்தீவு விவகாரம் தமிழக அரசியலின் முக்கிய பிரச்சார விவகாரமாகியுள்ளது.
கச்சத்தீவு விவகாரம்
தமிழ்நாட்டின் நில பரபரப்பான கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு கடந்த 1974-இல் கொடுத்ததை கடுமையாக நாட்டின் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பேசியதை அடுத்து வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கரும் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதனை தொடர்ந்து இந்த விவகாரம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழக அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மாறி, மாறி கட்சி தலைவர்கள் பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இவை அனைத்தும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரானதாகவே உள்ளது.
கலைஞருக்கு தெரியாமல்....
குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இந்த சூழலில் தான் திமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வள துறை அமைச்சரான துரைமுருகனிடம் இன்று இது குறித்து வினவப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த அவர், இது தொடர்பாக கலைஞரும் தானும் சட்டமன்றத்திலேயே பேசியிருப்பதாக குறிப்பிட்டு, அன்றைக்கே தனியார் நாளிதழில் தலையங்கத்தில் எழுதினார்கள் கலைஞருக்கு தெரியாமல் கட்சத்தீவை கொடுத்தது தவறு என்பதை குறிப்பிட்டார்.