அரசு கடமைகளில் இருந்து விடைபெறும் இளவரசி கேத் மிடில்டன் - பரபரப்பு தகவல்!
இளவரசி கேத் மிடில்டன் அரசு கடமைகளில் இருந்து விடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேத் மிடில்டன்
பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன்(42) ஆகிய இருவருக்கு 2011 ஆம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.அவருக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை நடந்ததாக அரண்மனை செய்தி வெளியிட்டிருந்தது.
பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு வீடியோ வெளியிட்டு, தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தார். வயிற்றுப்பகுதியில் செய்யப்பட்ட ஆபரேசனுக்கு பிறகான சோதனையின்போது புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும்,
அரசு கடமை
குடும்பத்தின் நலன் கருதி அதனை வெளிப்படையாக சொல்லவில்லை என்றும் கூறியிருந்தார். புற்றுநோய் பாதிப்பில் இருந்து அவர் குணமடைந்து வருகிறார். இந்நிலையில், புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதால் கேத் மிடில்டன் இந்த ஆண்டு முழுவதும் பொதுவெளியில் தலைகாட்ட மாட்டார் என்று
ஒரு வாரத்திற்கு முன்பு டெய்லி பீஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது கேத் மிடில்டன் அரச கடமைகளுக்கு திரும்பாமல் போகலாம் என கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு கிடைத்த தகவலை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
கேத் மிடில்டன் தனது புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அவரது மருத்துவ குழு மறு மதிப்பீடு செய்து வருகிறது. மருத்துவக் குழு அனுமதித்தால் அவர் அரச கடமைகளுக்கு திரும்புவார் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.