அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்த தெலுங்கர்கள்..நீங்க தமிழ் இனமா?- கஸ்தூரி சர்ச்சை!
நடிகை கஸ்தூரி அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள் என கூறியது சர்ச்சையாகியுள்ளது.
தமிழ் இனமா?
சென்னையில், பிசிஆர் சட்டம் போல பிராமணர்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி சட்டம் வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த நிலையில்,பிராமணர்கள் பாதுகாப்பு கோரும் ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, தெரியாமத்தான் கேட்கிறேன்.. 300 வருஷம் முன்னாடி,
கஸ்தூரி சர்ச்சை
ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்?
நீங்கள் யார் தமிழர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் தீயாய் பரவியதை தொடர்ந்து பல தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் அருந்ததியர்கள் என பேசியது சர்ச்சையாகி ஓயாத நிலையில் தற்போது கஸ்தூரியின் கருத்து பெரும் பேசுப்பொருளாக வெடித்துள்ளது.