அப்பா இருக்கும் போதே அந்த இடத்தில் கை வைத்தான் - பிரபல நடிகை கொந்தளிப்பு!

Kasthuri
By Sumathi Aug 24, 2023 05:30 PM GMT
Report

நடிகை கஸ்தூரி தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து பேசியுள்ளார்.

நடிகை கஸ்தூரி

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அப்பா இருக்கும் போதே அந்த இடத்தில் கை வைத்தான் - பிரபல நடிகை கொந்தளிப்பு! | Kasthuri Shankar Share Sexual Harassment Incident

இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ”நடிகர் சங்கம் சார்பாக விழா ஒன்று நடந்தது. அந்த விழாவிற்கு நானும் சென்று இருந்தேன். அந்த விழா முடிந்து வெளியே திரும்பும் பொழுது எக்கச்சக்க கூட்டம்.

 பாலியல் சீண்டல் 

அப்போது பின்பகுதியில் யாரோ ஒருவர் கிள்ளியது எனக்குத் தெரிந்தது. இதற்கும் என்னுடைய அப்பா என் அருகில் இருந்து கொண்டிருந்தார். உடனே நான் அவனுடைய கையை இறுக்கமாக பிடித்து,

அப்பா இருக்கும் போதே அந்த இடத்தில் கை வைத்தான் - பிரபல நடிகை கொந்தளிப்பு! | Kasthuri Shankar Share Sexual Harassment Incident

முன்னே இழுக்கும் பொழுது அவன் என்னிடம் சகோதரி சகோதரி.. மன்னித்துவிடு மன்னித்துவிடு என்று கதறினான். சோசியல் மீடியாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் நாங்கள் கருத்தியலாக மிகவும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டிருக்கிறோம்.

மீடியாவில் பெரும்பான்மையானோர் தங்களது வீட்டில் உள்ள பிரச்சினைகளால் விரக்தி அடைந்து, அந்த வக்ரத்தை எங்கே கொட்டுவது என்று தெரியாமல் பொது வெளியில் வந்து கொட்டுகிறார்கள். இவர்களெல்லாம் கெட்ட வார்த்தை பேசுகிற வீரர்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.