ஜெயலலிதா மர்ம மரணம்: அன்றே கனித்த கஸ்தூரி - ஆதாரம் இதோ..

Kasthuri J Jayalalithaa Tamil nadu
By Sumathi Oct 18, 2022 12:55 PM GMT
Report

ஜெயலலிதா மரணம் தொடர்பான செய்தியை தான் முன்னதாகவே கூறியதாக கஸ்தூரி ஆதாரம் காட்டியுள்ளார்.

ஜெயலலிதா மரணம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,

ஜெயலலிதா மர்ம மரணம்: அன்றே கனித்த கஸ்தூரி - ஆதாரம் இதோ.. | Kasthuri Remembered Tweet About Jayalalitha Death

அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து ஆணையம் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஜெயலலிதா இறந்ததாக கூறப்படும் நாளிலும் முரண்பாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கஸ்தூரி ட்வீட் 

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. ஆனால், டிசம்பர் 4 ஆம் தேதியே அவர் இறந்துவிட்டார் என அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி அப்போது அவர் ஷேர் செய்த பதிவை தற்போது ஷேர் செய்துள்ள அவர், 2016 டிசம்பர் 4ஆம் தேதி தனக்கு நன்றாக நினைவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் அதிகமாக இருந்தது. அதனால் தான் டிவிட் செய்ததாகவும் பின்னர் கடுப்பாகி அதனை டெலிட் செய்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

ஆனால் பேஸ்புக் லிங்க் அப்படியே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆறுமுகசாமி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திருக்குறளையும் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கத்தோடு ஷேர் செய்துள்ளார். அதாவது,

காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும் என குறிப்பிட்டுள்ளார்.