“பிக்பாஸ் போன்ற போலி நிகழ்ச்சிக்கு பின்னால் பணத்துக்காக ஓட முடியாது” - நடிகை கஸ்தூரி காட்டம்

tamil reality show big boss actor kasthuri comments on twitter
By Swetha 9 மாதங்கள் முன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சி ஃபேக் ஷோ என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

90-களின் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னனி நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் 3-வது சீசனில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த 5 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மீண்டும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கஸ்தூரி இடம்பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் இந்நிகழ்ச்சியில் இடம் பெறவில்லை.

நீங்கள் ஏன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கஸ்தூரியிடம் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர், "எனக்கு குடும்பம் இருக்கு, வேலைகள் நிறைய இருக்கிறது.

இந்த நச்சுதன்மை வாய்ந்த நிகழ்ச்சிக்கு வர நேரம் இல்லை. குறிப்பாக இந்த போலி நிகழ்ச்சிக்கு பின்னால் பணத்துக்காக ஓட முடியாது.

உங்கள் எதிர்பார்ப்பை வேறு எங்கேயாவது கொண்டு செல்லுங்கள்" என கஸ்தூரி காட்டமாக பதில் அளித்துள்ளார்.