மகன் விவாகரத்து.. அதை கேட்டதும் செம கடுப்பான கஸ்தூரி ராஜா - ரொம்ப கவலைப்போல?

Dhanush Aishwarya Kasthuri Raja Divorce
By Swetha Nov 25, 2024 07:30 AM GMT
Report

தனுஷ்- ஐஸ்வர்யா

விவாகரத்து குறித்த கேள்விக்கு கஸ்தூரி ராஜா கடுப்பாகியுள்ளார்.தனுஷ் ஐஸ்வர்யா நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

மகன் விவாகரத்து.. அதை கேட்டதும் செம கடுப்பான கஸ்தூரி ராஜா - ரொம்ப கவலைப்போல? | Kasthiri Raja Got Angry Dhanush Aishwarya Divorce

இந்த தம்பதிகளுக்கு யாத்ரா லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் தங்களது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் அறிவித்தனர்.

சட்டரீதியாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருவரும் தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

தனுஷ் ஐஸ்வரியாவிடம் மூடிய அறையில் விசாரணை - இருவரும் நீதிபதியிடம் சொன்னது என்ன?

தனுஷ் ஐஸ்வரியாவிடம் மூடிய அறையில் விசாரணை - இருவரும் நீதிபதியிடம் சொன்னது என்ன?

கஸ்தூரி ராஜா

அவர்களிடம் எதற்காக பிரிகிறீர்கள், ஏன் சிறிது கால அவகாசத்திற்கு பிறகு சேர்ந்து வாழக் கூடாது என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது. இருவருமே பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தீர்ப்பு தேதியை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மகன் விவாகரத்து.. அதை கேட்டதும் செம கடுப்பான கஸ்தூரி ராஜா - ரொம்ப கவலைப்போல? | Kasthiri Raja Got Angry Dhanush Aishwarya Divorce

இந்நிலையில் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கஸ்தூரி ராஜா, "இது நமக்கு சம்பந்தம் இல்லாத கேள்வி. நீங்கள் கேட்கக்கூடாது.

நான் இதனால்தான் பத்திரிகையாளர்களை சந்திப்பதே இல்லை. இது ஒரு அத்துமீறிய கேள்வி. சாரி" என்றார் கடுப்பாக. இதை பார்த்த நெட்டிசன்கள் மகன் விவாகரத்து விஷயத்தில் கஸ்தூரி ராஜா ரொம்பவே கவலையா இருக்கார் போல. அதனால்தான் இப்படி ஒரு பதில் கூறியிருக்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.