காஷ்மீர் விவகாரம்.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹமாஸ் - இந்தியாவுக்கு ஆபத்து!
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கைகோர்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் விவகாரம்
காஷ்மீர் ஆகீரமிப்பு விவகாரத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நீண்டகாலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. காஷ்மீரை உரிமை கொண்டாடி அவவ்போது பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்குப் பாகிஸ்தானுக்கு, இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 5ம் தேதி பாகிஸ்தானில், ‛காஷ்மீர் ஒற்றுமை தினம்' அனுசரிக்கப்பட்டது.இந்த மாநாட்டில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் தம்பி தால்ஹா சயிப் , உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
களமிறங்கிய ஹமாஸ்
இந்த மாநாட்டில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பங்கேற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநாட்டில் இந்தியாவுக்கு எதிராகக் காஷ்மீர் ஒற்றுமை மற்றும் ஹமாஸ் ஆபரேஷன் ‛அல் அக்சா ரத்தம்' (Kashmir Solidarity and Hams Operation ‛Al Aqsa Flood')'என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அல் அக்சா ரத்தம் என்ற வார்த்தை என்பது 2013 அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் தொடர்பான ஆபரேஷனின் பெயர் என்பதாகும். காஷ்மீர் விவகாரத்தில் ஹமாஸ் அமைப்பினர் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் களமிறங்கி உள்ளது தெரியவந்துள்ளது.