குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற மாட்டாங்க - ஏன் தெரியுமா?
குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்றப்படாது.
குடியரசு தினம்
சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தேசியக் கொடி ஏற்றபடும். ஆனால் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) கொடி ஏற்றும் வழக்கம் கிடையாது. மாறாக ஏற்றிய கொடியை அவிழித்து பறக்க விடுவார்கள்.
ஏனென்றால், நாடு ஏற்கெனவே விடுதலைப் பெற்று விட்டது, இப்போது குடியரசு என்பதை அறிவிப்பதற்காகவே, இந்த நிகழ்ச்சி. சுதந்திர தினத்தன்று தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றப்படும்.
தேசியக் கொடி
ஆனால் குடியரசு தின கொடி பறக்கவிடும் நிகழ்வு டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெறும். சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமர் கொடியை ஏற்றி நாட்டுமக்களுக்காக உரையாற்றுவார்.
ஆனால் குடியரசு தினத்தன்று நாட்டின் முதற்குடிமகனான குடியரசுத்தலைவர்தான் கொடியை அவிழ்த்து அதைப் பறக்க விடும் செய்கையை மேற்கொள்வார்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக தனது முதல் பதவியை தொடங்கினார்.