இன்ஸ்டாகிராம் பழக்கம்.. காதலியை சந்திக்க ஸ்கெட்ச் போட்ட வாலிபர்-கடைசியில் நேர்ந்த கதி!
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பாகிஸ்தான் பெண்ணை சந்திக்கப் புறப்பட்ட காஷ்மீர் இளைஞரைக் குஜராத் காவல்துறை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம்
ஜம்மு காஷ்மீர், பந்திப்போரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் இம்தியாஸ் ஷேக்(36). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பாகிஸ்தான் முல்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் அறிமுகமாகி உள்ளார்.
முதலில் நண்பர்களாகத் தொடங்கிய இவர்களது பேச்சு நாளடைவில் காதலாக மாறியது இந்த நிலையில் தனது காதலியை நேரில் சந்திக்க வேண்டும் என்று இம்தியாஸ் ஷேக்கிற்கு எண்ணம் வந்துள்ளது.
இதற்காக எல்லை கடந்து பாகிஸ்தான் பெண்ணை சந்திக்க முடிவு செய்தார். மேலும் குஜராத் மாநிலம், கட்ச் எல்லை வழியாகப் பாகிஸ்தானுக்குள் நுழைய முடியும் என்று நம்பிய இம்தியாஸ், அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற உதவி கோரினார்.
நேர்ந்த கதி
இதற்குக் காலதாமதம் ஏற்பட்டதால், இம்தியாஸ் இரவோடு இரவாகக் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கவ்டா கிராமத்திற்கு எல்லையைக் கடக்க வந்தார். ஆனால் அவரை குஜராத் காவல்துறை கைது செய்தனர்.
இது குறித்து குஜராத் மாநில காவல்துறை கூறியதாவது: ஷேக் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழையும் நம்பிக்கையில் கவ்டா கிராமத்திற்கு வந்தார்.
காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானுக்குப் பயணம் செய்வது அவருக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்று கூறினர். மேலும் அவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.