பேரீச்சம் பழத்தை வைத்து சம்பவம் செய்யும் இஸ்லாமியர்கள் - இஸ்ரேலுக்கு விழும் அடி!
ரமலான் நோன்பு மாதத்தில் காஷ்மீர் மக்கள் எடுத்துள்ள முடிவு ஒன்று கவனம் பெற்றுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ்
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் கடும் தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவத்தினர் காசாவுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியதில் 40,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையே நடந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தம் 90 நாட்களுக்கு அமலில் இருக்கும்.
காஷ்மீர் முடிவு
இதற்கிடையே தான் காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் ஜம்மு காஷ்மீரில் கடைக்காரர்களும், பொதுமக்களும் இஸ்ரேல் நாட்டின் பேரீச்சம் பழத்தை புறக்கணிக்க தொடங்கி உள்ளனர்.
காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இஸ்ரேல் பேரீச்சம் பழங்களை புறக்கணித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ரம்ஜான் நோன்பு காலத்தில், ஜம்மு காஷ்மீர் மக்கள் முடிவு இஸ்ரேல் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.