கொரியர்கள், ஜப்பானியர்கள் ஏன் இரவில் குளிக்கிறாங்க தெரியுமா? ஆச்சர்ய தகவல்!
சீனர்கள், ஜப்பானியர்கள் மற்றும் கொரியர்கள் இரவில்தான் குளிக்கின்றனர்.
இரவு குளியல்
நம் நாட்டில் பல ஆண்டுகளாக காலையில் குளிக்கும் பாரம்பரியம் உள்ளது. ஆனால், பண்டைய காலங்களிலிருந்தே ஜப்பான், கொரியா மற்றும் சீனாவில், இரவில் குளிக்கும் பழக்கம் இருந்து வருகிறது.
இரவில் குளிப்பது பகலில் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் மற்றும் அழுக்குகளை அகற்ற உதவுவதாக நம்பப்படுகிறது. கொரியாவிலும், ஒரு வேலை நாளுக்குப் பிறகு மாலையில் மக்கள் வீட்டிற்கு வந்தவுடன், இரவு தூக்கத்தைப் பெற இரவில் குளிக்க விரும்புகிறார்கள்.
என்ன காரணம்?
ஜப்பானிய மக்கள் ஓய்வெடுக்கவும், நல்ல இரவு தூக்கத்திற்கு மனரீதியாக தயாராகவும் இரவில் குளிக்கிறார்கள். இரவில் குளிப்பது உடலில் குவிந்துள்ள பகல்நேர அழுக்குகளை கழுவுவது மன தளர்வைப் பெற உதவும்.
மேலும், படுக்கை விரிப்புகளில் சேரும் எண்ணெய் மற்றும் அழுக்குகளின் அளவு குறையும். சரும ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா போன்ற மேற்கத்திய கலாச்சாரங்கள் காலையில் குளிக்க விரும்புகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.