திருமண வயதை குறைக்க அரசு திட்டம் - என்ன காரணம் தெரியுமா?
திருமண வயதை குறைக்க சீன அரசு திட்டம் வகுத்துள்ளது.
திருமண வயது
சீனா அரசு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தங்கள் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருவதாக அறிவித்தது. 2024இல் மக்கள் தொகை 14 லட்சம் குறைந்து 140 கோடியே 8 லட்சமாக இருந்தது.
எனவே, அரசு தனது நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்க பல திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால், அப்படியும் எந்த முன்னேற்றம் இல்லை.
அரசு திட்டம்
இது குறித்து ஆய்வு செய்ததில், இந்த மக்கள் தொகை குறைவிற்கு இளைஞர்கள் திருமணம் செய்துக்கொள்ளாதது முக்கியமான காரணமாக இருக்கிறது. திருமணங்கள் குறைவதால் குழந்தை பிறப்பும் குறைகிறது. இந்த இரண்டு காரணங்களும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
குழந்தை பிறப்பு காரணமாக முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பொருளாதார சிக்கலும் அதிகரித்துள்ளது. தற்போது ஆண்களின் திருமண வயது 22 ஆகவும் பெண்களின் திருமண வயது 20 ஆகவும் உள்ள நிலையில்,
திருமண வயதை 18ஆக குறைக்க சீன அரசு திட்டம் வகுத்துள்ளது. இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.