ஒலிக்கும் மரண ஓலம்; 34 பேர் பலி - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
விஜய் பிரச்சாரம்
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் வேலுசாமிபுரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள்,
குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
34 பேர் பலி
மேலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனை தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.